ஆபிரிக்க நாடுகளில் கொரோனா நிலவரம்

1 week

ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடாக தென்னாபிரிக்க அணி காணப்படுகின்றது.

அங்கு 124,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2,340 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் அங்கு 6,215 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அந்த காலப்பகுதியில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆபிரிக்க நாடுகளில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாக எகிப்து காணப்படுகின்றது.

அங்கு இதுவரையில் 2,620 பேர் உயிரிழந்துள்ளனர். 62,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 1,625 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆபிரிக்க நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 213 பேர் உயிரிழந்துள்ளடன், 11,757 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆபிரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக 362,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9,317 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read next: நியூசிலாந்தில் புதிதாக இருவருக்கு தொற்று