பிரித்தானியாவில் இன்று கொரோனா வைரஸ் தாக்கி மேலும் 186 பலி

1 week

பிரித்தானியவில் இன்று கொரோனா வைரஸ் தாக்கி மேலும் 186 பேர் பலியாகி உள்ளார்கள். இந்த காரணமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,414 ஆக உள்ளது. இரண்டு இறப்புகள் இரண்டு தடவை எண்ணப்பட்டதால் இன்று அவைகள் சரிசெய்யப்பட்டது. இதே வேளையில் கொரோனா வைரஸ் தாக்கி இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் சூழலில் இறந்தவர்களையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை 54,000 மேலாக இருக்கும் என்று தெரியவருகிறது.

இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,006 ஆக உள்ளது. பிரித்தானியவில் மொத்தம் 309,360 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உளளர்கள்.

உலக அளவில் பார்க்கும் பொழுது, அமெரிக்காவில் மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 2,446,706 இருப்பதன் காரணமாக தொற்றுகள் அடிப்படையில் அது முதலாவது இடத்திலும் இதற்கு அடுத்த படியாக பிரேசில் 1,228,114 தொற்றுக்களுடன் இரண்டாவது இடத்திலும், ரஷ்யா 619, 939 தொற்றுகளுடன் மூன்றாவது இடத்திலும் இந்தியா 490,401 அதற்கு அடுத்த படியாக பிரித்தானியா உள்ளது. இறப்புகளை பொறுத்தவரை 124,749, 54,971, 8,770, 15,301 மற்றும் 43,498 ஆக முறையே உள்ளது (ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்)

 இங்கிலாந்து, வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் இல் 23 ஜூன் 2020 கிடைத்த தகவலின்படி 391 பேர் கோவிட்-19 நோயுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்இதற்க்கு முன்னர் ஜூன் 16, 2020 அன்று இது 494 ஆக இருந்தது (103 குறைந்தது).

ஜூன் 25, 2020 கிடைத்த தகவலின் படி 276 பேர் சுவாசகருவியின் உதவியுடன் சுவாசிக்கும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஜூன் 18 இல் 352 ஆக இருந்தது (72 குறைத்தது).

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய அணைத்து பகுதியையும் பார்க்கும் பொழுது மொத்தம் 4,006 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 4,687 ஆக இருந்தது. இதனால் இந்த கிழமை 681 ஆக குறைத்துள்ளது.

Read next: பொது சுகாதார அதிகாரிகளுக்கு பகிரப்படவுள்ள அதிகாரங்கள்