கொவிட்-19க்கான தடுப்பு மருந்தை செப்டெம்பரில் தயாரிக்க ரஷ்யா திட்டம்

1 week

கொவிட் 19க்கான தடுப்பு மருந்து தயாரிப்பை செப்டெம்பர் மாதம் ஆரம்பிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

தற்போழுது ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தன்னார்வளர்களிடத்தில் மேற்கொண்டுவரும் பரிசோதனை வெற்றியயளித்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சியாளர்கள் தேர்விக்கின்றனர்.

ரஷ்ய அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் இணையத்தள தகவல்களின் படி, ரஷ்யாவின் மொஸ்கோ, சென் பிற்றர்ஸ்பேர்க் மற்றும் நொவொசிபிர்ஸ்க் ஆகிய பகுதிகளைசேர் சேர்ந்த விஞ்ஞானிகளினால் 9 கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை உலக சுகாதார ஸ்தாபனம் பட்டியலில் உள்ளிடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மருந்துகள் சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைக்கு உட்பட்டுள்ளதுடன், சில மனிதர்களிடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

செயல்திறனை இழந்த வைரஸ்களை உருவாக்குவதன் மூலம்  நோய் எதிர்ப்பு முறைமையை உருவாக்கும்  முறைமையை விஞ்ஞானிகள் தெரிவு செய்துள்ளனர்.

மாதிரிகளை மனிதனின் உடலில் உள்ளது போல் சூழலை ஒருவாக்குவதற்க்காக 37 டிகிரி வெப்பநிலையிலும் ஐந்து வீத கார்பன் டயக்ஸைட்டில் ஒரு பரிசோதனை பெட்டியினுள் இரவு முழுவதும் வைக்கின்றனர்.

மாதிரியின் சிறிய பகுதிகள் அதன் தூண்டுதலுக்கு ஏற்றாற் போல் செயற்பட்டால் நுண்காட்டியின் கீழ் பகுதியில் சிறிய சிறிய நீல நிற புள்ளிகள் தோன்றும். இதுவே உயிரணுவின் நோய் எதிர்ப்பு முறை ஆகும்.

கொரோனா வைரஸ் எதிர்பொருட்களுக்களின் தூண்டுதலினால் உயிரணுக்கள் செயற்பட ஆரம்பிப்பதை பார்க்கக் கூடியதாக உள்ளதாகவும், அதன் மூலம் வைரஸுக்கு எதிரான  T- உயிரணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகியுள்ளதாகவும் மூலக்கூற்று நோய் எதிர்ப்பு ஆராய்ச்சியாளர் அலெக்ஸான்ட்ரா மலீவா குறிப்பிட்டுள்ளார்.

ரீ செல் அல்லது ரீ அணு என்பது உயிரணுக்களின் மூலமாக ஏற்படும் நோயெதிர்ப்பு திறன் பணிகளில் மையமாக பணியாற்றும் நிணநீர் குழாய்களில் ஒன்றாகும்.

ரீ செல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வது தடுப்பு மருந்து உற்பத்திக்கு உதவும் என நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ரீ நிணநீர்குழாய்களினால் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் நோய் எதிர்ப்பு முறைமையை உருவாக்க முடியும். சிறிய அளவில் மனித உடலில் அவற்றால் வாழ முடியும்.ஆனால் கிருமி தொற்று ஏற்படும் போது அவை விரைவாக செயற்பட்டு எண்ணிக்கையில் அதிகரித்து விடும். அதேபோன்று கிருமிகளுக்கு எதிராக மிகவும் செயற்றிறனுடன் போராடும் தன்மைக்கொண்டது என்று ஆராய்ச்சியாளர் கிரிகொரி எபிமொவ் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க செயற்றிறனை கொண்ட இரண்டு தடுப்பு மருந்துகளில் ஒன்று புற்றுநோய் கட்டிகள் தொடர்பான ஆய்வு தடுப்பு மருந்து, மற்றையது இன்புளவன்ஸா விகாரமடைவதற்காக ரஷ்ய உயிரியல் தொழில் நுட்ப நிறுவனத்தினால் தாயரிக்கப்பட்டவை. கோடைக்காலத்தின் நடுப்பகுதியில் பரிசோதனைக்கு விடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவின் சுகாதார அமைச்சின் அனுமதியை தாம் பெற்றுள்ளதாகவும், விலங்குகளிடத்தில் இந்த தடுப்பு மருந்தினை பரிசோதிக்கும் ஆரம்ப கட்டத்துக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கையளித்துள்ளதாக ரஷ்யாவின் முன்னனி புத்தாக்க நிறுவனமான பயோகாட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி  பதிமித்ரி மொரோஸோவ் குறிப்பிட்டுள்ளார்.

வெகு விரைவில் மருத்துவ சிகிச்சைகக்கு இந்த மருந்தை பயன்டுத்தும் நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே தமது நோக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இபோலா தடுப்பு மருந்தை கண்டுபிடித்த அனுபம் காணப்படுகின்றமையினால் தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிர் மையத்தின் கமலேய் தேசிய ஆராய்ச்சி நிபுணர்கால்  கொவிட் 19 ற்கு எதிரான தடுப்பு மருந்தின் பரிசோதனையை ஆரம்பிக்க முடிந்துள்ளது.

Read next: பிலிப்பைன்ஸிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்தனர்