லண்டன் இம்பீரியல் கல்லூரி தயாரித்து பரிசோதிக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்து-முழுமையான தகவல்

5 days

முதல் தன்னார்வலருக்கு இன்று இம்பீரியல் கல்லூரி தயாரித்த பரிசோதனை கொரோனா வைரஸ் மருந்து புதன் கிழமை செலுத்தப்பட்டது. வரும் சில வாரங்களில் ஏறக்குறைய 300 பேரில் இந்த வரும் காலத்தில் கொரோனா வைரஸுக்கு பயன்படுத்தலாம் என்று நம்பப்படும் மருந்து பரிசோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களில் பயன்படுத்துவதற்கு முன்னர் இந்த மருந்து மிருகங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. 

இந்த முதல் பரிசோதனைக்கு பின்னர் இரண்டாவது கட்ட பரிசோதனைகள் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 6,000 நபர்ககளில் பரிசோதிக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

இம்பீரியல் கல்லூரி தயாரித்த இந்த மருந்தானது RNA என்று அழைக்கப்படும் செயற்கையாக தயாரித்த மரபணு குறியீடுகளை உள்ளடக்கியது ஆகும். இந்த தடுப்பு மறுத்து கொரோனா வைரஸ் போல் விகடம் செய்யும் திறன் கொண்டது என்று தெரியவருகிறது. இது சீனா போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும்  மருந்துகளில் இருந்து வேறு பட்டது. மற்றைய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் பொதுவாக இயற்கையான வைரஸை செயல் இழக்கச்செய்து அல்லது மாற்றி அமைத்து தயாரிக்கப்படுகிறது. பாரம்பரியமாக இவ்வாறுதான் இந்த மருந்துகள் இதுவரைக்கும் தயாரிக்கப்படுகின்றது.

இம்பீரியல் கல்லூரி தயாரிக்கும் இந்த கொரோனா தடுப்பு மருந்து ஒரு புதிய அணுகுமுறையை பின்பற்றுகின்றது. இது உடம்பில் கோவிட் -19 கிருமியை வளர்க்காமல் உடலில் உள்ள கோவிட்-19 கையாளுவதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படுள்ளது. 

இந்த ஆய்வை தலைமை தாங்கி நடத்தி வரும் பேராசிரியர் ரொபின் ஷாட்டோக் (Professor Robin Shattock) தெரிவிக்கையில் ஒரு லிட்டர் synthetic என்று அழைக்கப்படும் செயற்கை பொருளில் இருந்து 2 மில்லியன் அளவை (dose) மருந்துகளை தயாரிக்க முடியும் என்று தெரிவித்தார். இதன் மூலம் அதிக அளவிலான மருந்துகளை தயாரிக்க வேண்டிய பிரச்சினையை சரியாக கையாளமுடியும் என்று தெரிவித்தார். 

இந்த ஆய்வின் பின்னால் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆய்வுகுக்குழு மேலும் தெரிவிக்கையில் இந்த மருந்து 2021 ஆண்டின் முற்பகுதியில் பிரித்தானியா மற்றும் உலகில் உள்ள மற்றைய பகுதிகளுக்கும் வினியோகிக்க முடியும் என்று தெரிவித்தனர். 

தற்போழுது புதிய கொரோனா வைரஸால் உருவாகும் கோவிட்-19 நோயை குணப்படுத்த எந்த மருந்தும் இல்லை.  உலகம் முழுவதும் 100 க்கு மேற்பட்ட மருந்துகள் தயாரித்து சோதனைகள் நடைபெற்று வருகின்றது. இருந்த பொழுதிலும் பத்துக்கு மேற்பட்டவையே மனிதரில் பரிசோதிக்க படும் நிலைக்கு முன்னேறி உள்ளது. 

பிரித்தானியவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த மருந்து தற்போழுது பிரித்தானியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரிசோதிக்கப்படுகிறது.

Read next: காஷ்மீரில் மேலும் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை