கொரோனா: வெனிசூலாவுக்கு உதவுமாறு. ரஷ்யாமற்றும் சீனாவுக்கு அமெரிக்கா அறிவுரை

5 days

Photo: kremlin.ru

கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வெனிசூலா நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் அதன் கூட்டணி நாடுகளானரஷ்யாவும் சீனாவும். உதவி செய்ய வேண்டும் என அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது.

இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர். பலர் இறந்துள்ளனர். ஆனால் அந்நாட்டு அரசு மருத்துவர்களையும், சுகாதார ஊழியர்களையும் கைது செய்துள்ளது என ஒரு சுகாதார கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க பிரதிநிதி எலியட் ஆபிரகாம். கூறினார்.

சீனாவும் ரஷ்யாவும் மனிதாபிமான அடிப்படையில் உதவும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  தற்போது அவை செய்து வரும் பொருள் உதவிகளை டாலர்களில் கணக்கிட்டால் மிகவும் குறைவு என்றும் அவர் கூறினார்.

வெனிசூலாவின் பொருளாதாரம் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் நாடு சீரழிந்து கிடப்பதால் அந்நாட்டில் இருந்து 6.5 மில்லியன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். சுமார்50 நாடுகளால்.  அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவரான காய்டோவின் அரசு 50 மில்லியன் டாலர்கள் பான் அமெரிக்க. நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், மடுரோ  தலைமையிலான அரசு 450 அரசியல் பிரமுகர்களை கைது செய்தும் உச்ச நீதிமன்றத்தை அடக்கியும் வைத்துள்ளது. தற்போது அந்நாட்டில் உச்சநீதிமன்றம் அடிமையாக செயல்படுகிறது என்றார்.

அமெரிக்காவின் திட்டத்தை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற பிரச்சினை தற்போது இல்லை. மடுரோ அரசு ஏற்றுக் கொண்டால். பேச்சுவார்த்தை நடத்தவும், அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை நீக்கவும் வழி பிறக்கும் என்று ஆபிரகாம் தெரிவித்தார்.

Read next: லண்டன் இம்பீரியல் கல்லூரி தயாரித்து பரிசோதிக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்து-முழுமையான தகவல்