தமிழகத்தில் ஒரே நாளில் 45 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்

1 week

தமிழகத்தில் இன்று (ஜூன் 25) ஒரே நாளில் 45 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர், மேலும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 911 ஆகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் இன்று மேலும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாகவும், இதில் 151 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமுள்ள 88 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,543 கொரோனவுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை தமிழகத்தில் 10,08,974 கொரோனவுக்கா பரிசோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று அரசு மருத்துவமனையில் 29 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் ஆக மொத்தம் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதுவரை குணமடைந்து வீடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 30,064 பேர் சிகிச்சைபெறுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Read next: கொரோனா: வெனிசூலாவுக்கு உதவுமாறு. ரஷ்யாமற்றும் சீனாவுக்கு அமெரிக்கா அறிவுரை