சே குவரா பிறந்த வீடு ஏலத்தில்

1 week

உலகப் புகழ்பெற்ற இடதுசாரி புரட்சி வீரர் எர்னெஸ்ட்டோ சே குவரா பிறந்த வீடு ஏலத்தில் விற்கப்படவுள்ளது.

இந்த வீடு ஆர்ஜென்ரீனாவின் ரொஸாரியோ நகரிலுள்ள பழைய கட்டடமொன்றில் அமைந்துள்ளது.


இதனை ஆர்ஜென்ரீன வர்;த்தகர் ஒருவர் 2002ஆம் ஆண்டில் கொள்வனவு செய்திருந்தார்.

சே குவராவின் இல்லத்தை கலாசார நிலையமாக மாற்றுவது நோக்கமாக இருந்ததென்றாலும், அந்த நோக்கம் கைகூடவில்லையென அந்த வர்த்தகர் தெரிவித்தார்.

சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna), ஜூன் மாதம் 14ஆம் திகதி 1928ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவில் பிறந்தார்.


இவர் ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி.

கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்

Read next: கொரோனா கூட்டத்துக்காக தனது திருமணத்தை தள்ளி வைத்த பிரதமர்