ஆகஸ்ட் 14 சசிகலா விடுதலை? தமிழகத்தில் பரபரப்பு

6 days

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடியும் முன்பாகவே நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சசிகலாவின் விடுதலை திகதி தொடர்பான தகவல் தவறானது. சிறைத்துறையில் அந்த மாதிரியான பேச்சுவார்த்தையோ, நடவடிக்கையோ எதுவும்நடைபெறவில்லை என்றனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழிசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் திகதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தண்டனை காலம் முடிய 2021-ம்ஆண்டு ஆகும்.

எனினும் இதற்கு முன்பாகவே நன்னடத்தை விதியின் கீழ் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்சசிகலா (கைதி எண் 9234) எப்போது விடுதலை செய்யப்படுவார்? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு கர்நாடக சிறைத்துறை, “சசிகலா விடுதலை செய்யப்படுவதில் பல தரப்பட்ட குழப்பங்கள் இருப்பதால், வெளியே வரும் தேதியை எங்களால் துல்லியமாக தெரிவிக்க முடியாது என பதிலளித்தது.

இதற்கிடையே, ‘சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 14-ம் திகதி சிகலா விடுதலை செய்யப்படுவார் என நேற்று  தகவல்கள் பரவின.

டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி ட்விட்டரில் இதே தகவலை பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Read next: ஐரோப்பாவில் கொரோனா தொற்றாளர்களில் எண்ணிக்கை அதிகரிப்பு