செனகல் நாட்டு ஜனாதிபதி மெக்கி செல் சுய தனிமைக்கு உட்பட்டுள்ளார்

1 week

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவரை சந்தித்ததை அடுத்து செனகல் நாட்டு ஜனாதிபதி மெக்கி செல் சுய தனிமைக்கு உட்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தம்மை சோதனைக்கு உட்படுத்தியபோது அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது உறுதியானபோதும் முன்னெச்சரிக்கையாக அவர் இரண்டு வாரம் சுய தனிமையில் ஈடுபட்டுள்ளார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

முன்னதாக தமக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக செனகல் பாராளுமன்ற உறுப்பினர் யெயா டியல்லோ கடந்த புதன்கிழமை குறிப்பிட்டார்.

மக்கள் சமூக இடைவெளி மற்றும் சுத்தத்தை பேணுமாறு அவர் அறிவுத்தி இருந்தார்.

இதேவேளை செனகலில் 6,129 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 93 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: சீனாவை கட்டுப்படுத்த ஆசியாவில் அமெரிக்க படைகளை குவிக்க தயாராகும் அமெரிக்கா !