அவுஸ்திரேலியாவில் வேகமெடுக்கும் கொரோனா

1 week

அவுஸ்திரேலியாவில் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவு ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 33 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இங்கு சுமார் 270 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் கடந்த 10 நாட்களாக இரட்டை இலக்க எண்களில் கொரோனா பரவல் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

மேலும் கடந்த 10 நாட்களில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பித்துள்ள நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பதவிக் காலத்தை நீடிக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தம்