பெருவில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் இரண்டு குழந்தைகள் மரணம்

1 week

பெருவில் கடந்த வாரம் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகளின் துயர மரணத்திற்கு மருத்துவ ஒக்ஸிஜன் பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருக்கலாம், என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு நிகழ்த்ததற்கு பெருவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகள் கொரோனா வைரஸ் நெருக்கடியின் அழுத்தத்தினால் தடுமாறிக்கொண்டு இருப்பதே காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது .

வடக்கு பெருவியன் நகரமான தாராபோட்டோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருதய-சுவாசதாக்குதலுக்கு ஆளான ஒரு குழந்தையின் மீது கை செறிவூட்டிகளை செவிலியர்கள் பயன்படுத்தியதருணங்களை அங்கே பணிபுரியும் எவெலியா குரேரா எனும் செவிலியர் தனது கைத்தொலைபேசியைபயன்படுத்தி படமாக்கியுள்ளார்.  இது குறித்து அவர்  கூறுகையில்:

மருத்துவ ஒக்ஸிஜனின் பற்றாக்குறை குறித்து கவனத்தை ஈர்க்க தாம் இந்த சம்பவத்தை படமாக்கியதாகவும், அந்த காணொளியில் ஒக்ஸிஜன் இல்லைஎன்று கூறுவதை கேட்கலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சான் மார்ட்டின் துறையின் மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ஆண்டர்சன் சான்செஸ்

விளக்கமளிக்கையில், செவிலியர்களின் முயற்சியால் இரட்டை குழந்தைகளும் புத்துயிர்ப்பெற்றனர் ஆனால் பின்னர் இருவரும் இறந்துவிட்டனர் என்று தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில், பெரு அரசாங்கம் மருத்துவ ஒக்ஸிஜனை வழங்குவதை தேசிய நலன் என்றும் கொரோனா வைரஸால் ஏற்படும் சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடியின் விளைவுகளிலிருந்து தேசம் பின்வாங்குகிறது என்றும் தெரிவித்துள்ளது.

கோவிட் -19 போன்ற சுவாசத்துடன் தொடர்புடைய நோய்களால் துன்புறுவோருக்கு மருத்துவ ஒக்சிஜன் அவசியமான ஒன்றாக காணப்படுகிறது.

பெருவின் அரசாங்கம் தெரிவிக்கையில்  தமது  ஒக்சிஜன் இறக்குமதியை அதிகரித்து அதன் மூலம் நாட்டில் ஒக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை செய்யப்படும்  என்றும் தமதுதினசரி ஆக்ஸிஜன் தேவை 173 டொன் என்றும் கூறியுள்ளது.

பெருவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகன் எண்ணிக்கை 264,000 க்கும் மேலாக உயர்ந்துள்ளன, புதன்கிழமை (ஜூன் 24) நிலவரப்படி 8,500 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read next: ஜப்பானில் கொரோனா இரண்டாவது அலை.