மலாவி தேர்தலில் ஜனாதிபதிக்கு வெற்றி வாய்ப்பு.

6 days

மலாவில் நேற்று ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றது. தற்சமயம் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தலை நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கிய நிலையில், நேற்றைய தினம் இரண்டாவது தடவையாக தேர்தல் இடம்பெற்றது.

இம்முறை ஜனாதிபதி பீற்றர் முத்தாரிகாவுக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மலாவியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் காணப்படும் நிலையில் இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது.

அங்கு 803 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் 11 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Read next: பெருவில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் இரண்டு குழந்தைகள் மரணம்