முகக் கவசங்களை அணியும்படி பிரேசில் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவு

1 week

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோவுக்கு முகக் கவசங்களை அணியும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி பொல்சொனாரோ பொது இடங்களில் முகக் கவசம் இன்றி தோன்றி வருகிறார்.

எனினும் குறித்த மாவட்டத்திற்குள் முகக் கவசம் அணிவது கடந்த ஏப்ரல் 30 தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் கடந்த மே 11 ஆம் திகதி மேலும் கடுமையாக்கப்பட்டு முகக் கவசம் அணியாதவர்களுக்கு 387 டொலர் அபராதம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை மீறினால் ஜனாதிபதி அபராதத்திற்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பற்றி குறைத்து மதிப்பிடுவது பற்றி தீவிர வலதுசாரி ஜனாதிபதி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நோய்த் தொற்றைஒரு சிறிய காய்ச்சல் என்று கூறி வருகிறார்.

கொரோனா வைரஸ் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Read next: அமெரிக்காவில் கொரோனா இறப்புகள் 180,000ஐ கடக்கும்: வாஷிங்டன் பல்கலைக்கழகம்