தமிழகத்தில் ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா

1 week

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், 2,532 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 60 ஆயிரத்தை நெருங்குகிறது.

தினசரி பரிசோதனை எண்ணிக்கையும், நேற்று, 30 ஆயிரத்தை கடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ள, 86 ஆய்வகங்களில், நேற்று மாத்திரம் 31 ஆயிரத்து, 401 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட 2,532 பேரில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 52 பேர் எனவும், சென்னையில் 1,493 பேரும், செங்கல்பட்டில் 121 பேரும், கடலூரில் 102 பேரும், மதுரையில் 68 பேரும், திருவள்ளூரில் 120 பேரும், வேலூரில் 87 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் பாதிப்பு உள்ளது.

Read next: தென்னாபிரிக்க அணியின் 7 பேருக்கு கொரோனா