உடுமலை சங்கர் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு

2 weeks

உடுமலை சங்கர் ஆணவக் கொலை மேல் முறையீட்டு வழக்கில், ஐந்து குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முக்கியக் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை வழக்கிலிருந்து விடுவித்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞர் சங்கரை கடந்த 2015ல் திருமணம் செய்தார்.  கடந்த 2016ல், மூன்று பேர் கொண்ட கும்பல் கவுசல்யாவையும் சங்கரையும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆயுதங்களால் தாக்கினர்.

இதில் சங்கர் இறந்தார். கவுசல்யா படுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்த கொலை வழக்கில், கவுசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 2017ல் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார்கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை,பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

மரண தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகளும், மூன்று பேர் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பிலும்  மேல்முறைடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இரு வழக்குகளையும் சேர்த்து விசாரித்தது.

இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதிகள் தண்டனையை குறைத்து உத்தரவிட்டனர்.

Read next: வல்லை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதான இளைஞன் தொடர்ந்தும் ரி.ஐ.டி விசாரனையில்!!